Sunday, 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -11


மறுநாள் அலுவலகம் சென்ற கீர்த்தி, கார்த்தியிடம் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூற கார்த்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா இருக்கும் நிலைமையில் இவளை பதிவு திருமணம் செய்வது கூட கடினம். மனமுடைந்திருக்கும் அவர்களுக்கு கீர்த்தி மட்டுமே ஆதரவு. திருமணம் நடக்க வேண்டும் எனில் அது கீர்த்தனா அம்மாவின் முழு சம்மதத்துடன் தான் என்பதை தெளிவாக உணர்ந்தான். மறுநாளே பிரச்சனையின் ஆணிவேரை தேடி சென்றான்.

புகைப்படத்தில் இருக்கும் ஒருவர், கார்த்தி அப்பாவின் நெருங்கிய நண்பர். அவரும் புதுச்சேரியை சார்ந்தவரே. அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் நண்பரான சாமிநாதன் பற்றிய விவரத்தை கேட்டான். அவர் கொடுத்த முகவரியோ, கீர்த்தனா கொடுத்த அதே பழைய முகவரியே. இந்த முகவரியில் அவர் தற்பொழுது இல்லை எனக் கூறி மேலும் சில விபரங்களை கேட்டான். சில நாட்களாகவே சாமிநாதனுடன் தொடர்பில் இல்லை என கூறவே அவரின் வேறு சில நண்பர்களின் விபரங்களோ, உறவினர் விபரங்களோ தரும்படி கூறவே அவரும் தனது பழைய டைரியை எடுத்து தேடி சாமிநாதனின் தங்கை முகவரி கொடுத்தார். அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தான் கார்த்தி. எதற்காக அவரை தேடுகிறார் என்று வினவ ஏதோ கூறி சமாளித்து விட்டு சாமிநாதனின் தங்கை வீட்டுக்கு சென்றான்.

அங்கு சாமிநாதனின் தங்கை மட்டும் இருக்கவே, அவர்களிடம் சென்று தான் சாமிநாதனின் நண்பரின் மகன் எனவும், அவரை தேடி பழைய இல்லத்திற்கு சென்றதாகவும் கூறி, அவரின் புதிய முகவரியை கேட்டான்.

“அண்ணன் இப்போ பாண்டிச்சேரியிலே இல்லை பா. குடும்பத்தோட சொந்த ஊருக்கே போய்டாரு. காஞ்சிபுரத்துல இருக்காரு”.

“சரி ஆண்ட்டி.. நீங்க அட்ரஸ் குடுங்க. நான் அங்க போயி பாத்துகிறேன்.”

“இதோ இந்த பா. இந்த டைரி ல இருக்கு. எழுதிக்கோ பா”.

“தாங்க்ஸ் ஆண்ட்டி. அப்போ நான் கிளம்புறேன்”.

அங்கிருந்து நேராக காஞ்சிபுரத்திற்கு கிளம்பினான். காஞ்சிபுரத்தில் அவரின் முகவரியை தேடி ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என் பேரு கார்த்தி. இங்க சாமிநாதன்?”.

“நான் தான் சாமிநாதன். நீ யாருனு தெரியலையே தம்பி?”

“என்னை உங்களுக்கு தெரியாது. உள்ளே போயி பேசலாமா அங்கிள்?”

“சரி உள்ளே வா பா. என்ன விஷயம் னு சொல்லு?”

“உங்க ஃப்ரெண்ட் ஜெய்சங்கர் என்ன ஆனார்னு தெரியுமா? அவரு குடும்பம் என்ன ஆச்சுனு தெரியுமா?”

“ஹேய் நீ யாரு? உனக்கு என்ன வேணும்? ஜெய்சங்கர் ஆ? அப்பிடி ஒரு ஃப்ரெண்ட் எனக்கு இல்லை.”

“அது தானே. அவரை ஃப்ரெண்ட் ஆ நினைச்சுருந்தா நீங்க ஏன் அவரை ஏமாத்த போறீங்க? அசிங்கமா இல்லையா சார்? இப்பிடி பண்ணிட்டீங்களே!! நீங்க பண்ணுண வேலையால அவர் இறந்துட்டார். அவர் குடும்பமே இப்போ ஊரை விட்டே போயிட்டாங்க. மனசாட்சியே இல்லையா சார்?”

“ஓவரா பேசாத தம்பி. நீ உன் வேலையை பாத்துக்கிட்டு போ.”

“போக முடியாது சார். நீங்க அவர்கிட்ட ஏமாத்துன பணம் திரும்ப வேணும். அவர் உயிரை தான் திரும்பி கொடுக்க முடியாது. அட்லீஸ்ட் அவர்கிட்ட ஏமாத்துன பணம் எனக்கு வேணும் சார்”.

“இங்க இருந்து நீ உயிரோட போன தானா டா. இந்த ஊர் முழுக்க என் ஆள்கள் இருக்காங்க. உயிர் வேணும்னா ஒழுங்கா ஓடிடு. பணம் அது இதுனு பேசுன அநியாயமா 
உன் உயிரும் போய்ரும்”.

“ஓ. அப்பிடியா!! என் உயிர் போனா நீங்க மொத்தமா வாழ்நாள் ஃபுல் லா ஜெயில்ல களி சாப்பிட வேண்டியது தான்.”

“என்ன டா ஓவரா பேசற?”

“ சரி நான் பேசலை. நீங்க அப்பிடியே உங்க வீட்டுக்கு வெளிய போயி  சுத்தி எத்தனை போலீஸ் நிக்கிறாங்கணு பாருங்க”.

கார்த்தி வெளியில் நின்ற போலீஸை அழைத்து சாமிநாதனை அரெஸ்ட் செய்யும்படி கூற, சாமிநாதனும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டான். கீர்த்தனாவுக்கு கால் பண்ணி தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் காவல்நிலையம் வரும்படி அழைத்தான். முறையாக கீர்த்தனா கொடுத்த கம்ப்ளைண்ட் பேரில் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவனிடம் இருந்து பணம் காவல் துறையால் மீட்டுக் கொடுக்கப்பட்டது. கீர்த்தனாவின் அம்மா கார்த்தியின் செயலை பார்த்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டினாள்.

கீர்த்தனாவுக்கு கார்த்தியை விட தன்னால் நல்ல மாப்பிளை பார்க்க முடியாது என்பதை மனதார உணர்ந்த அவள் தாய் கீர்த்தனாவிடம் கார்த்திக்கு வீட்டுக்கு சென்று வருவோம் என அழைத்தாள். கார்த்தி வீட்டிற்கு சென்று திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம் என வினவ அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அடுத்து வரும் முகூர்த்த தினத்திலேயே கீர்த்தனா, கார்த்தி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நெருங்கிய உறவுகள், நண்பர்கள் என அழைப்பிதழ் கொடுக்கும் வரிசையில் கார்த்தியின் முன்னாள் காதலிகளான ஜெனி, ரம்யாவும் இருந்தனர். திருமண ஏற்பாடுகளும் மிக அருமையாக நடந்துக் கொண்டிருந்தது.

கீர்த்தி அப்பாவின் ஆசைப்படி கீர்த்தனா வாழ ஒரு புது வீடு வாங்கும் படி கீர்த்தனா அம்மா கூற, அதன்படி ஒரு அழகிய வீடு வாங்கப்பட்டது. அனைவரும் எதிர்ப்பார்த்த கார்த்தி, கீர்த்தி திருமண நாளும் வந்தது. எவ்வித இன்றி இரு வீட்டு பெரியவர்களும் வாழ்த்த நண்பர்கள், பழைய காதலிகள் வருகையுடன் திருமணம் இனிதே முடிந்தது. திருமணம் முடிந்த கையுடன் புது இல்லத்தில் குடியேறினார். கீர்த்தனாவுக்கான முதல் முத்தத்தை எவ்வித தடையும் இன்றி கொடுத்தான் கார்த்தி.

பிரிந்திருந்த நேரங்களில்
நிலவில் என்னை கண்டாய்
சேர்ந்து விட்ட நேரத்தில்
என்னில் நிலவை கண்டாய்
இனி ஒரு போதும்
உன்னை பிரிய மனமில்லை
நீ இல்லாத ஒரு
கனவும் இனி இங்கில்லை”.

கீர்த்தனா என்றென்றும் கார்த்தியின் தோழி, காதலி, மனைவி....

1 comment:

  1. nice story.. please read my story... http://www.rishvan.com

    ReplyDelete