Sunday 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி


வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 1.


வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 2.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 3.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 4.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 5.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 6.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 7.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 8.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 9.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 10.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் - 11.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -11


மறுநாள் அலுவலகம் சென்ற கீர்த்தி, கார்த்தியிடம் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூற கார்த்திக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா இருக்கும் நிலைமையில் இவளை பதிவு திருமணம் செய்வது கூட கடினம். மனமுடைந்திருக்கும் அவர்களுக்கு கீர்த்தி மட்டுமே ஆதரவு. திருமணம் நடக்க வேண்டும் எனில் அது கீர்த்தனா அம்மாவின் முழு சம்மதத்துடன் தான் என்பதை தெளிவாக உணர்ந்தான். மறுநாளே பிரச்சனையின் ஆணிவேரை தேடி சென்றான்.

புகைப்படத்தில் இருக்கும் ஒருவர், கார்த்தி அப்பாவின் நெருங்கிய நண்பர். அவரும் புதுச்சேரியை சார்ந்தவரே. அவரின் இல்லத்திற்கு சென்று அவரின் நண்பரான சாமிநாதன் பற்றிய விவரத்தை கேட்டான். அவர் கொடுத்த முகவரியோ, கீர்த்தனா கொடுத்த அதே பழைய முகவரியே. இந்த முகவரியில் அவர் தற்பொழுது இல்லை எனக் கூறி மேலும் சில விபரங்களை கேட்டான். சில நாட்களாகவே சாமிநாதனுடன் தொடர்பில் இல்லை என கூறவே அவரின் வேறு சில நண்பர்களின் விபரங்களோ, உறவினர் விபரங்களோ தரும்படி கூறவே அவரும் தனது பழைய டைரியை எடுத்து தேடி சாமிநாதனின் தங்கை முகவரி கொடுத்தார். அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தான் கார்த்தி. எதற்காக அவரை தேடுகிறார் என்று வினவ ஏதோ கூறி சமாளித்து விட்டு சாமிநாதனின் தங்கை வீட்டுக்கு சென்றான்.

அங்கு சாமிநாதனின் தங்கை மட்டும் இருக்கவே, அவர்களிடம் சென்று தான் சாமிநாதனின் நண்பரின் மகன் எனவும், அவரை தேடி பழைய இல்லத்திற்கு சென்றதாகவும் கூறி, அவரின் புதிய முகவரியை கேட்டான்.

“அண்ணன் இப்போ பாண்டிச்சேரியிலே இல்லை பா. குடும்பத்தோட சொந்த ஊருக்கே போய்டாரு. காஞ்சிபுரத்துல இருக்காரு”.

“சரி ஆண்ட்டி.. நீங்க அட்ரஸ் குடுங்க. நான் அங்க போயி பாத்துகிறேன்.”

“இதோ இந்த பா. இந்த டைரி ல இருக்கு. எழுதிக்கோ பா”.

“தாங்க்ஸ் ஆண்ட்டி. அப்போ நான் கிளம்புறேன்”.

அங்கிருந்து நேராக காஞ்சிபுரத்திற்கு கிளம்பினான். காஞ்சிபுரத்தில் அவரின் முகவரியை தேடி ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என் பேரு கார்த்தி. இங்க சாமிநாதன்?”.

“நான் தான் சாமிநாதன். நீ யாருனு தெரியலையே தம்பி?”

“என்னை உங்களுக்கு தெரியாது. உள்ளே போயி பேசலாமா அங்கிள்?”

“சரி உள்ளே வா பா. என்ன விஷயம் னு சொல்லு?”

“உங்க ஃப்ரெண்ட் ஜெய்சங்கர் என்ன ஆனார்னு தெரியுமா? அவரு குடும்பம் என்ன ஆச்சுனு தெரியுமா?”

“ஹேய் நீ யாரு? உனக்கு என்ன வேணும்? ஜெய்சங்கர் ஆ? அப்பிடி ஒரு ஃப்ரெண்ட் எனக்கு இல்லை.”

“அது தானே. அவரை ஃப்ரெண்ட் ஆ நினைச்சுருந்தா நீங்க ஏன் அவரை ஏமாத்த போறீங்க? அசிங்கமா இல்லையா சார்? இப்பிடி பண்ணிட்டீங்களே!! நீங்க பண்ணுண வேலையால அவர் இறந்துட்டார். அவர் குடும்பமே இப்போ ஊரை விட்டே போயிட்டாங்க. மனசாட்சியே இல்லையா சார்?”

“ஓவரா பேசாத தம்பி. நீ உன் வேலையை பாத்துக்கிட்டு போ.”

“போக முடியாது சார். நீங்க அவர்கிட்ட ஏமாத்துன பணம் திரும்ப வேணும். அவர் உயிரை தான் திரும்பி கொடுக்க முடியாது. அட்லீஸ்ட் அவர்கிட்ட ஏமாத்துன பணம் எனக்கு வேணும் சார்”.

“இங்க இருந்து நீ உயிரோட போன தானா டா. இந்த ஊர் முழுக்க என் ஆள்கள் இருக்காங்க. உயிர் வேணும்னா ஒழுங்கா ஓடிடு. பணம் அது இதுனு பேசுன அநியாயமா 
உன் உயிரும் போய்ரும்”.

“ஓ. அப்பிடியா!! என் உயிர் போனா நீங்க மொத்தமா வாழ்நாள் ஃபுல் லா ஜெயில்ல களி சாப்பிட வேண்டியது தான்.”

“என்ன டா ஓவரா பேசற?”

“ சரி நான் பேசலை. நீங்க அப்பிடியே உங்க வீட்டுக்கு வெளிய போயி  சுத்தி எத்தனை போலீஸ் நிக்கிறாங்கணு பாருங்க”.

கார்த்தி வெளியில் நின்ற போலீஸை அழைத்து சாமிநாதனை அரெஸ்ட் செய்யும்படி கூற, சாமிநாதனும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டான். கீர்த்தனாவுக்கு கால் பண்ணி தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் காவல்நிலையம் வரும்படி அழைத்தான். முறையாக கீர்த்தனா கொடுத்த கம்ப்ளைண்ட் பேரில் சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவனிடம் இருந்து பணம் காவல் துறையால் மீட்டுக் கொடுக்கப்பட்டது. கீர்த்தனாவின் அம்மா கார்த்தியின் செயலை பார்த்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டினாள்.

கீர்த்தனாவுக்கு கார்த்தியை விட தன்னால் நல்ல மாப்பிளை பார்க்க முடியாது என்பதை மனதார உணர்ந்த அவள் தாய் கீர்த்தனாவிடம் கார்த்திக்கு வீட்டுக்கு சென்று வருவோம் என அழைத்தாள். கார்த்தி வீட்டிற்கு சென்று திருமணத்தை எப்போது வைத்து கொள்ளலாம் என வினவ அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அடுத்து வரும் முகூர்த்த தினத்திலேயே கீர்த்தனா, கார்த்தி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நெருங்கிய உறவுகள், நண்பர்கள் என அழைப்பிதழ் கொடுக்கும் வரிசையில் கார்த்தியின் முன்னாள் காதலிகளான ஜெனி, ரம்யாவும் இருந்தனர். திருமண ஏற்பாடுகளும் மிக அருமையாக நடந்துக் கொண்டிருந்தது.

கீர்த்தி அப்பாவின் ஆசைப்படி கீர்த்தனா வாழ ஒரு புது வீடு வாங்கும் படி கீர்த்தனா அம்மா கூற, அதன்படி ஒரு அழகிய வீடு வாங்கப்பட்டது. அனைவரும் எதிர்ப்பார்த்த கார்த்தி, கீர்த்தி திருமண நாளும் வந்தது. எவ்வித இன்றி இரு வீட்டு பெரியவர்களும் வாழ்த்த நண்பர்கள், பழைய காதலிகள் வருகையுடன் திருமணம் இனிதே முடிந்தது. திருமணம் முடிந்த கையுடன் புது இல்லத்தில் குடியேறினார். கீர்த்தனாவுக்கான முதல் முத்தத்தை எவ்வித தடையும் இன்றி கொடுத்தான் கார்த்தி.

பிரிந்திருந்த நேரங்களில்
நிலவில் என்னை கண்டாய்
சேர்ந்து விட்ட நேரத்தில்
என்னில் நிலவை கண்டாய்
இனி ஒரு போதும்
உன்னை பிரிய மனமில்லை
நீ இல்லாத ஒரு
கனவும் இனி இங்கில்லை”.

கீர்த்தனா என்றென்றும் கார்த்தியின் தோழி, காதலி, மனைவி....

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -10


அந்த வார கடைசியில் கார்த்தி இல்லதிற்கு கீர்த்தியும், அவள் அம்மாவும் சென்றனர். வழக்கத்தை விட அதிக உபசரிப்புடன் வரவேற்றனர். கார்த்தியின் அம்மாவும், அப்பாவும் மெல்ல பேச்சை ஆரம்பித்தனர்.

“என்ன சென்னை பிடிச்சுருக்கா? வீட்டு பக்கத்துலே எல்லா வசதியும் இருக்கா?”

“ம்ம். எல்லா வசதியும் இருக்கு. கீர்த்தனாவே எல்லாம் வாங்கிட்டு வந்துருவா. நான் பொதுவா வெளிய போறதே இல்லை.

“அதான். உங்களை இங்க கூட்டிட்டு வர சொன்னோம்.”

“உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியலை. கீர்த்தி அப்பா இறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் முன்னாடி நின்னு செய்யுறது உங்க புள்ளை தான். சொந்த காரங்களே 2 நாள் இருந்துட்டு போனது தான். அதுக்கு அப்புறம் எங்களை திரும்பி கூட பாக்கலை. இதுக்கு எல்லாம் நாங்க என்ன கைமாறு செய்ய போறோம்.”

“இதுல என்ன இருக்கு மா. நாங்களும் உறவு மாதிரி தான். கீர்த்தி கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க.”

“என்ன பண்றதுணு தெரியலை. இவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்காமலே அவரு போய் சேந்துட்டாரு. சொந்தக்காரங்களும் கூட இல்லை. எல்லாம் என் தலையில பெரிய பொருப்பா வந்துருசுங்க.”

“இந்த நிலைமையில இந்த விஷயத்தை பேச கஷ்டமா தான் இருக்கு. ஆனா ஒரு துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடத்துறது நல்லது தானா,”

“ நீங்க என்ன சொல்ல வரிங்கணு புரியலை”.

“சரி சுத்தி வளைக்காம நேராவே கேக்குறேன். கீர்த்தியை எங்க வீட்டு மருமகளா ஆக்கிகிற நினைக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க?”.

“திடீர்னு இப்பிடி கேக்குறிங்க. இருந்தாலும் நான் கீர்த்தியை ஒரு வார்த்தை கேக்கணும்.”
“இப்பவே சொல்லனும்னு இல்லை. வீட்டுக்கு போய் நல்லா யோசிச்சு கூட சொல்லுங்க.”

“சரிங்க. அப்போ நாங்க கிளம்புறோம். என்னது. கிளம்புரிங்களா.? மதியம் சாப்பாடு இங்க தான். இருங்க. பாதி சமையல் ல போட்டு வந்துட்டேன். நான் போய் சமைக்கிறேன்.”

“நானும் வரலாமா சமையல் அறைக்கு?

“ஓ!! தாராளமா. வாங்களேன். “

இருவரின் அம்மாவும் சேர்ந்து சமைத்து, எல்லோரும் ஒன்றாக மகிழ்வுடன் உணவு உண்டனர். உணவிற்கு பின் கார்த்தியின் அம்மா, கீர்த்தியையும், அவள் அம்மாவையும் வீட்டை சுற்றி காட்டுகிறேன் எனக் கூறி அழைத்துச் சென்றாள். அப்போது தான் எதிர்பாராத விதமாக சுவரில் மாட்ட பட்டு இருந்த அந்த புகைபடத்தை பார்த்தாள் கீர்த்தியின் அம்மா. பார்த்ததுமே முகம் எல்லாம் மாறி வியர்த்தது. படபடவென்று வந்ததை உணர்ந்த அவள் அங்கேயே அமர்ந்தாள்.

“அம்மா, அம்மா!! என்ன ஆச்சு அம்மா?”

“அம்மாவுக்கு திடீர்னு என்ன ஆச்சு மா கீர்த்தி?”

“தெரியலை ஆண்ட்டி. கொஞ்சம் தண்ணி கொண்டு வரிங்களா?”

“இதோ இருக்கு மா”.

தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தாள். ஹாஸ்பிடல் போகலாமா அம்மா?

“இல்லை கீர்த்தி. வேணாம். அந்த போட்டோவை பாரு மா”.

“இவரா? ஆண்ட்டி இவர் யார் ஆண்ட்டி? அங்கிள் பக்கத்துல நிக்கிறாரே?”

“ஒருத்தர் அங்கிள் ஃப்ரெண்ட். இன்னொருத்தர் அவர் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட் மா. எதுக்கு கேக்குற?”

“அது வந்து ஆண்ட்டி!!! அவர் தான் எங்க அப்பாகிட்ட வீடு வாங்கி தரேனு சொல்லி பணத்தை ஏமாத்திட்டு போனார். எங்க அப்பாவோட சாவுக்கு காரணமே அவர் தான்.”

“சாரி மா. நீ சொல்றவர் யாருனே அங்கிள்க்கு தெரியாது.”

“சரி ஆண்ட்டி. நாங்க கிளம்புறோம். அம்மா ரொம்ப டென்ஷன் ஆ இருக்காங்க”.

“சரி மா. பாத்து போங்க. அடிக்கடி அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வா மா”.

“சரி ஆண்ட்டி”.

வீட்டுக்கு சென்றதும் “கீர்த்தனா எனக்கு இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்லை அம்மா. அவங்க வீட்ல எதுக்கு தெரியாத ஒருத்தன் போட்டோவை மாட்டி வைக்க போறாங்க. இவங்களுக்கும், அந்த ஆளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும்னு எனக்கு தோணுது மா”
“ச்சா. அப்பிடி இருக்காது மா. அவங்க நல்ல குடும்பம் தான் மா”.
“எனக்கு பிடிக்கலை மா. இதோட இந்த பேச்சை விட்டுடலாம்.”

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -9




அன்று மாலை வீட்டிற்கு சென்ற கார்த்தி தன் அம்மாவிடம் சீக்கிரமே தன் கல்யாணம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று கூற
, அவளோ இப்போது தான் காதலை பற்றியே அறிந்தோம். அதற்குள் கல்யாணம் என்ற அடுத்த குண்டை போடுகிறானே. அவரை எப்படி சமாளிப்பது?

இப்போ என்ன டா அவசரம்? உங்க அப்பா என்ன சொல்லுவாங்களோ?. சரி டா. பேசலாம்”.

சரி மா. அதுக்கு முன்னாடி  கீர்த்தனாவையும், அவங்க அம்மாவையும் ஒரு முறை வீட்டுக்கு கூட்டிட்டு வரவா.

தாராளமா கூட்டிட்டு வா.

அலுவலகம் சென்ற கார்த்தி கீர்த்தனாவிடம் தங்கள் கல்யாண விஷயமாக பேச தந்தை இறந்து சில தினங்களே ஆன நிலையில் முதலில் தயங்கினாள். பின் இந்த பிரச்சனையை பற்றி எடுத்துக் கூறியதும் புரிந்துக் கொண்டாள். ஆனால் அம்மாவிடம் இந்த நிலைமையில் கல்யாணத்தை பற்றி எப்படி பேசுவது என தயங்கினாள். அம்மாவும், நீயும் ஒரு முறை வீட்டிற்கு வாங்க. என் அப்பா, அம்மாவை உங்க அம்மாகிட்ட பேச சொல்றேன்”.

சரி கார்த்தி. நான் அம்மாவை கூட்டிக்கிட்டு இந்த சன்டே வீட்டிற்கு வரேன்”.

இருவரும் இருந்த சகஜ நிலையை பார்த்த ஜெனிக்கு ஆச்சரியம். ஜெனியின் மனதில் அவள் வீட்டில் ஏதும் பிரச்சனை ஏற்படலையா? நாம போட்ட லெட்டர் சரியான அட்ரஸ்க்கு போகலையா? இல்லை. கீர்த்தனா கையிலே கிடைச்சிருச்சா? எப்படி தெரிஞ்சுகிறது? ஆனாலும் பிரச்சனை ஏதும் நடக்கலை போல!!! வேற ஏதாச்சும் பண்ணனும். பேசாம கீர்த்தனா வீட்டுக்கு போயி அவங்க அம்மாவை பாத்து எல்லாத்தையும் சொல்லிடலாமா? வேணாம். நேர்ல போனா ரிஸ்க். கார்த்திக்கு தெரிஞ்சா என்னை சும்மா விட மாட்டான். கீர்த்தனா வீட்டு நம்பர் தெரிஞ்சா கால் பண்ணியே பேசிடலாம்.நம்பர் தானே தெரிஞ்சுக்குவோம்.

ஹாய் கீர்த்தி. சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். ஒரு கால் பண்ணனும். உன் ஃபோன் கொடுக்குறீங்களா?”

ம்ம். இந்தாங்க.

ஜெனி மனக்குரல். ச்ச. ஹோம் னு நம்பர் இல்லை. சரி அம்மானு சர்ச் பண்ணலாம். எஸ்‌எஸ். இருக்கு. கார்த்தி உன் லவ்வை பிரிக்காம விட மாட்டேன். என்னையா இன்சல்ட் பண்ற!!!!!!!!!

மாலை வீட்டிற்கு சென்ற கீர்த்திக்கு காஃபி கொடுத்தாள் அவள் அம்மா. காஃபி அருந்திக் கொண்டே அவள் அம்மாவிடம் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தாள்.

அம்மா. நாம இந்த சன்டே கார்த்தி வீட்டுக்கு போய்ட்டு வரலாமா? கார்த்தி வர சொல்றான்.

நீ மட்டும் போய்ட்டு வா மா. நான் எதுக்கு?”

உனக்கு ஒரு சேஞ்ச் வேணும். சென்னை வந்ததுல இருந்து வீட்லே இருக்கணு தான் உன்னைய கூட்டிட்டு வர சொன்னான். நீ வரலைனா நானும் போகலை மா”.

சரி மா. வரேன். போகலாம். நான் போய் டின்னர் ரெடி பண்றேன் மா”.

சற்று நேரத்தில் அவள் அம்மாவின் அலைபேசி ஓசை கேட்க அவள் அம்மாவை அழைத்தாள் கீர்த்தனா.

நான் தான் வேலையா இருக்கேன்ல கீர்த்தி. நீயே எடுத்து பேசு மா. யாருனு கேளு

ஹலோ. கீர்த்தனா அம்மா வா. நான் சொல்றதை கேளுங்க. உங்க பொண்ணு கீர்த்தனா, கார்த்தி னு ஒரு பையனா லவ் பண்ற. அந்த பையன் ரொம்ப மோசமானவன். ஏற்கனவே 2,3 பொண்ணுங்களை ஏமாத்திருக்கான். இப்போ உங்க பொண்ணை ஏமாத்த பாக்குறான். உங்க பொண்ணு வாழ்க்கையை காப்பத்துங்க. ஹலோ. லைன் ல இருக்கீங்களா?”
அத்துடன் கீர்த்தனா இணைப்பை துண்டித்தாள். யாரு இந்த வேலையை பண்றா? என தனக்குள்ளேயே யோசித்தாள்.

கீர்த்தனா அம்மா எதுவுமே பேசலையே. பொண்ணு வாழ்க்கையை நினைச்சு டென்ஷன் ஆகிருப்பாங்களோ. ஆகட்டும். ஆகட்டும். நாம நினைச்சது நடந்தா நல்லது தான்ஜெனி தனக்குள்ளே சந்தோசமானாள்.


மறுநாள் அலுவலகத்தில் தனக்கு வந்த போனில் கூறியவற்றை நினைத்து கலவரமாய் இருந்தாள் கீர்த்தனா. கீர்த்தனாவின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த ஜெனி மிகவும் சந்தோஷம் அடைந்தாள். கார்த்தி கூறியபடி திருமணத்தை விரைவில் முடித்து விட வேண்டும் என தனக்குள் முடிவு செய்தாள் கீர்த்தனா. மதிய உணவு இடைவேளையின் போது கார்த்தியை சந்தித்து விஷயத்தை கூறினாள்.

உங்க அம்மா ஃபோன் நம்பர் இப்போ சென்னைக்கு வந்த பின்னாடி தான் மாத்துன. கண்டிப்பா இதை நம்ம சுத்தி இருக்க யாரோ தான் பண்ணுறாங்க. யாருக்கெல்லாம் அம்மாவோட புது நம்பர் தெரியும் கீர்த்தி?”.

உனக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியும் கார்த்தி”.

அப்புறம் எப்பிடி கீர்த்தி ஃபோன் வரும்? நல்லா யோசிச்சு சொல்லு கீர்த்தி”.

யாருக்கும் கொடுக்கலை டா. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு”.

உன் ஃபோனை உன்னை தவிர வேற யாராவது யூஸ் பண்ணுவாங்களா?”

நேத்து தான் ஜெனி வாங்குனா. அதுக்கு முன்னாடி ஒரு தடவை அவளே தான் வாங்கிருக்கா. வேற யாருக்கும் கொடுத்தது இல்லை கார்த்தி.

சந்தேகமே இல்லை கீர்த்தி. கண்டிப்பா இதெல்லாம் அவ தான் பண்றா கீர்த்தி. அவகிட்ட அளவா வச்சுக்கோனு சொன்னேன். நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம் கீர்த்தி. சரி விடு. இன்னைக்கே அவளை சந்திச்சு பேசிடுறேன். இதுக்கு மேல அவ நம்ம விஷயத்துல தலை இட கூடாது.

சரி கார்த்தி. நானும் வரேன். அவகிட்ட பேசலாம்.

மாலை அலுவலகம் அருகில் இருக்கும் பூங்காவில் ஜெனி, கீர்த்தி, கார்த்தி மூவரும் சந்தித்து பேசினர்.

கார்த்தி: எதுக்காக இப்பிடி பண்ற ஜெனி?”

ஜெனி: நான் என்ன பன்னேன்? எதை பத்தி கேக்குற?”

கார்த்தி: சும்மா நடிக்காத டி. எதுக்கு நீ கீர்த்தி வீட்டுக்கு லெட்டர் போட்ட? அவங்க அம்மாவுக்கு கால் பண்ணின?”

ஜெனி: நான் எதுக்கு உன்னை பத்தி தப்பு தப்பா அவங்க அம்மாகிட்ட சொல்ல போறேன்”.

கார்த்தி: நிறுத்து உன் நாடகத்தை. எதுக்கு கால் பண்ணுனனு தான கேட்டேன். நீயா தான இப்போ உளறின. உனக்கும் எனக்கும் சரி வரலைனு தான உன்னை விட்டு விலகுனேன். என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா?”

கீர்த்தி: கார்த்தி அமைதியா இரு. நான் பேசிக்கிறேன். ஜெனி, கார்த்தி உன்னை பொருத்தவரை எப்பிடினு எனக்கு தெரியாது. ஆனா எனக்கு கார்த்தி இல்லாத வாழ்க்கை இல்லை. ஏற்கனவே என் வீட்ல நிறைய ப்ராப்ளம் இருக்கு. அப்பா இறந்து ஒரு மாசம் தான் ஆகுது. அம்மா அதை விட்டே இன்னும் வெளிய வரலை. இப்போ என்னையும், கார்த்தியும் பத்தி தப்பு தப்பா சொன்னா அம்மாவால தாங்க முடியாது. கார்த்தி லாஸ்ட் மன்த் ஹையர் ஸ்டடீஸ் கு அமெரிக்கா போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருந்தப்பா தான் அப்பா இறந்தாங்க. அதோட பிளான் ஏ விட்டுட்டான். எனக்காக லைஃப் ஏ விட்டுட்டு இருக்கான். எங்களையும், எங்க காதலையும் வாழ விடு ஜெனி. பிளீஸ்.

ஜெனி: என்னை மன்னிச்சுருங்க. நான் இப்பிடி எல்லாம் பண்ணது கார்த்தி என்னை இன்சல்ட் பண்ணிடானு தான். மத்தபடி எந்த காரணமும் இல்லை. என்னை மன்னிசுருங்க. உங்க லவ் சக்ஸஸ் ஆகணும். ஆல் தி பெஸ்ட்.

கீர்த்தி: தாங்க்ஸ் ஜெனி.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -8


அந்த கடிதம் கீர்த்தனாவின் அம்மாவின் கையிலே கிடைத்தது. யார் எழுதிய கடிதம் என பிரித்து பார்க்க தயார் ஆனாள். அப்போது பார்த்து அடுப்பில் வைத்திருந்த குக்கரில் இருந்து விசில் சத்தம் கேட்கவே கடிதத்தை வைத்து விட்டு சமையல் வேலைகளில் மூழ்கினாள். அதன் பின் கடிதம் வந்த நினைவே இல்லாமல் வேலைகளை முடித்து விட்டு கீர்த்தனாவுக்காக காத்திருந்தாள்.

கீர்த்தனா வந்ததும் முகத்தை கழுவி விட்டு தன் அம்மா கொடுக்கும் சூடான காஃபிக்கு காத்திருந்தாள். காஃபி போட்டு வருவதற்குள் மேஜை மீது இருந்த கடித்தை பார்த்ததும் பிரித்து பார்த்தாள். பெயர், முகவரி ஏதும் இல்லாமல் எழுதப் பட்டு இருந்தது.
கீர்த்தனாவின் பெற்றோருக்கு,

என் பெயர், முகவரி இவை எல்லாம் தேடி அலைய வேண்டாம். நான் சொல்ல போகும் விஷயம் மட்டுமே உங்களுக்கு மிக முக்கியம். தங்களின் ஒரே பெண்ணான கீர்த்தனா ஒருவனை காதலிக்கின்றாள். காதலிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இதற்கு முன் அவன் இரு பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி விட்டு இப்போது அவன் உங்கள் பெண்ணை ஏமாற்ற வந்துள்ளான். தங்களின் குடும்பத்தின் மீது உள்ள அக்கறையிலேயே இதை தெரிவிக்கிறேன்.
                                                               உங்கள்
                                                            நலம் விரும்பி.

கடிதத்தை படித்ததும் கீர்த்தனாவுக்கு வியர்த்துக் கொட்டியது. “அம்மா ஒரு வேலை இந்த லெட்டரை படித்து இருப்பார்களோ!! ச்ச சே. லெட்டர் தான் பிரிக்காம இருந்ததே. அப்புறம் எப்பிடி? கார்த்தியை பத்தி யாரு இப்பிடி மோசமா எழுதி இருப்பாங்க?” இப்படி ஓடிய அவள் சிந்தனையை “கீர்த்தி இதை குடி மா. யார்கிட்ட இருந்து லெட்டர் வந்துருக்கு?” என்ற அவள் அம்மாவின் குரல் கலைத்தது.

“அது ஒண்ணும் இல்லை மா. ஆஃபிஸ் ல இருந்து தான் வந்திருக்கு.” என்று கூறி சமாளித்தாள்.

“சரி கீர்த்தி மா. மளிகை சாமான் கொஞ்சம் வாங்க வேண்டி இருக்கு. போகலாமா?”

“சரி மா. ஒரு அரை மணி நேரத்தில போகலாம்.”

தன் அறைக்கு சென்றவள் லெட்டரை எடுத்து தன் ஹேண்ட் பேக்கில் ஒளித்து வைத்தாள். மறுநாள் அலுவலகத்திற்கு சென்று கார்த்தியை அழைத்து அந்த லெட்டரை காட்டினாள். கார்த்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “இது வரை நமது காதலை பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லையே. பின்னர் எப்படி உன் வீட்டிற்கு லெட்டர் வந்தது. யார் அனுப்பி இருப்பா?” என்று குழம்பினான். கீர்த்தி முகத்தில் கலவரம் நிலவியதை கண்டு அதிர்ந்தான் கார்த்தி.

“என்ன கீர்த்தி? நான் உன்னை ஏமாத்திடுவேணு நினைக்கிறியா?”

“ச்சா. உன்னை நான் எப்பிடி சந்தேக படுவேன்?”

“அப்புறம் ஏன்? முகம் எல்லாம் வாடி இருக்கு? என்ன நினைக்கிற கீர்த்தி?”

“யார் இந்த வேலையை பண்ணிருபாங்கணு தான் ஒரே குழப்பமா இருக்கு.”

“என்ன பத்தி நல்ல தெரிஞ்ச ஒருத்தங்க தான் இதை பண்ணிருக்கணும்.அதுவும் அவங்களுக்கு நம்ம லவ் பத்தியும் தெரிஞ்சு இருக்கு.சரி கீர்த்தி நீ ஒண்ணும் கவலை படாதே. “

“ஆனா கார்த்தி. அம்மா மட்டும் இந்த லெட்டரை படிச்சுருந்தா நம்ம காதலுக்கு எப்பவுமே ஒத்துக்க மாட்டாங்க. அது தான் என் பயமே. இப்போ என் கண்ணுல பட்டுச்சு. இதோட முடிஞ்சது. அடுத்து நம்மலை பிரிக்க அடுத்த முயற்சி பண்றதுக்குள்ள இதை பண்ணுனது யாருனு கண்டு பிடிக்கணும் கார்த்தி”.

“கண்டுபிடிச்சுடலாம் கீர்த்தி. நீ எதுக்கும் கவலை படாதே. “

என்ன தான் கீர்த்திக்கு ஆறுதல் கூறினாலும் கார்த்தியின் மனதே சஞ்சலத்தில் இருந்தது. தன்னை பற்றி கேவலமாக எடுத்து கூற யார் முன் வந்திருப்பார் என யோசனையில் ஆழ்ந்தான்.எப்படியேனும் கீர்த்தனாவை மணந்தே ஆக வேண்டும்.இனியும் தாமதிக்க கூடாது. அதற்கான முயற்சிகளை எடுப்பது பற்றி கீர்த்தனாவிடம் பேச வேண்டும் என சிந்தித்தான்.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -7


மறுநாளே வேலையில் சேர்ந்தாள் ஜெனி. இவன் கெட்ட நேரமோ என்னவோ கீர்த்தனாவின் அருகில் இருந்த இருப்பிடத்தில் தான் ஜெனியின் இருக்கை. கார்த்தியின் புதிய காதலி என்று தெரியாமலே ஜெனி கீர்த்தனாவோடு உறவாட ஆரம்பித்தாள். அது கார்த்திக்கு சற்றும் பிடிக்கவில்லை.

“ஹாய். நான் ஜெனி. ஜெனிபர். நியூ அப்பாய்ண்ட்மென்ட். நீங்க?

“கீர்த்தனா. லாஸ்ட் 1 இயர் இங்க தான் வொர்க் பண்றேன்”.

ஜெனிக்கும் கார்த்திக்கு ஏற்பட்ட அதே உணர்வு ஏற்பட அதை கீர்த்தனாவிடம் தெரிவித்தாள்.“நீங்க பார்க்கிறதுக்கு என்ன மாதிரியே இருக்கீங்க. உங்களுக்கு அப்பிடி ஏதும் தோணலையா?”

“நீங்க சொன்ன பின்னாடி தான் கவனிச்சேன். எனக்கும் அப்பிடி தான் தோணுது”.
இதற்கு மேல் இவர்களை பேச விடக்கூடாது என்று தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்து வந்த கார்த்தி,

ஹாய் கீர்த்தனா. என்னங்க பிஸியா. நான் வேணும்னா அப்புறம் வரட்டுமா?”

“இல்லை கார்த்தி. சொல்லுங்க”

“காஃபி சாப்பிட்டுகிட்டே பேசலாமா. கேண்டீன் வரிங்களா?”

ஜெனியின் மனக்குரல்(அழகான பொண்ணை பார்க்க கூடாதே. உடனே வழிஞ்சுருவானே)

“ஓகே. கீர்த்தி. நைஸ் டூ மீட் யு. சி யு லேட்டர்”.

“ஓகே சூர் ஜெனி. பை”.

கேண்டீன் சென்ற இருவரும் காஃபி வாங்கி கொண்டு இருக்கையில் அமர்ந்தனர்.

“கீர்த்தி நீ அவள்கிட்ட அதிகமா பேச்சு வச்சுக்காத”.

“யாருகிட்ட கார்த்தி?”

“அதான் உன் பக்கத்துல இருக்காலே ஜெனி. அவள்கிட்ட தான்”

“ஏன் கார்த்தி? நீ இப்பிடி எல்லாம் சொல்ல மாட்டியே?”

“அது வந்து. கீர்த்தி அவ தான் என் ஃபர்ஸ்ட் லவ்வர் ஜெனி”.

“அவளா!!!!!! சரி கார்த்தி. நான் அதிகமா பேச்சு வச்சுக்கலை. ஆனா அவளா பேசும் போது அவாய்ட் பண்ண முடியாது.”

“ஓகே கீர்த்தி. பாத்து பேசு. அவ ஒரு மாதிரி”.

தொடர்ந்து வந்த நாட்களில் ஜெனியின் கவனம் கீர்த்தனா, கார்த்தி மீதே இருந்தது. இருவரும் காதலிக்கிறார்களோ என சந்தேகித்தவள் அதை உறுதி செய்ய பல முறை கீர்த்தனாவின் வாயை கிளறினாள். ஆனால் கீர்த்தனா ஜெனியின் கேள்விகளுக்கு பிடி கொடுக்கவில்லை. ஆனால் எப்படியாவது தெரிந்து கொள்ள முயற்சித்தாள் ஜெனி. ஒரு நாள் தன் அலைபேசியை மறந்து வைத்து விட்டதாகவும், அவசரமாக ஒரு கால் செய்ய வேண்டும் என கூறி கீர்த்தனாவின் அலைபேசியை கேட்டாள். கீர்த்தனாவும் அலைபேசியை கொடுத்து விட்டு தன் வேலைகளில் கவனமானாள். அலைபேசியை வாங்கி கொண்டு சென்று கீர்த்தனாவுக்கு தெரியாமல் அவளுக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே பெரும்பாலானவை கார்த்தியிடம் இருந்தே வந்திருந்தது. அதுவும் காதல் ரசம் பொங்க.. கார்த்தியின் காதலை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்ன தான் பிரிவு ஏற்பட்டு இருந்தாலும், ஏதோ ஒரு மூலையில் இருந்த போசெஸ்ஸிவ்னேஸ் அவளை சங்கடத்தில் ஆழ்த்தியது.

காதலை தெரிந்து கொண்ட ஜெனி நிம்மதியாக இல்லை. ஏதோ ஒன்றை இழந்ததை போல உணர ஆரம்பித்தாள். அதன் பின் தன்னை விட்டு இவளை எப்படி திருமணம் செய்யலாம்? நடக்காது. நடக்க விட கூடாது என முடிவு செய்தாள். கார்த்தியிடம் சென்று பேசலாமா என்று யோசித்தாள். ஆனால் அதனால் பலன் ஒன்றும் இல்லை என தெரியும் அவளுக்கு. சரி வேற என்ன செய்யலாம். கீர்த்தனாவும் அவனை உருகி உருகி காதலிக்கிறாள். அவளிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. ஆனால் எனக்கு என் பழைய காதல் மீண்டும் வேண்டும். அதற்காக நான் எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டேன் என்று முடிவு செய்தாள்.

வேறு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தவள் அவர்களுக்குள் பிரிவை உண்டாக்க வேண்டும். தானாக பிரிந்தால் தான் அவள் கார்த்தியுடன் சேர முடியும் என முடிவெடுத்தவள் கீர்த்தனாவின் இல்லத்திற்கு பெயர் இல்லாத ஒரு மொட்டை கடிதம் போட தயாரானாள். அந்த கடிதம் கீர்த்தனாவின் அம்மா, அப்பா கையில் கிடைத்தால் இவர்கள் காதலுக்கு முற்றுப் புள்ளி கிடைக்கும் என நம்பி அந்த வேலையை துணிந்து செய்தாள்.அவளின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறியது.

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -6


இரண்டு நாட்களில் கீர்த்தனாவும் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். முன்பு போல வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினாள். அப்பாவின் இழப்பு அவளுக்கு ஈடு செலுத்த முடியாத ஒன்று. ஒரே மகள் என்பதாலும், ஆண் வாரிசு இல்லை என்பதாலும் இவளை ஒரு ஆணுக்கு இணையாகவே வளர்த்தார். அவளுடைய இந்த முன்னேற்றதிற்கு மிக முக்கிய காரணம் அவள் அப்பா மட்டுமே.

அவனுடைய வெளிநாட்டு பயண முடிவை பற்றியும், அவன் காதலை வீட்டில் கூறி சம்மதம் வாங்கியது பற்றியும் கீர்த்தியிடம் கூறினான். காதலுக்கு சம்மதம் கூறியதை எண்ணி மகிழ்ந்தாலும் அதே நேரத்தில் தன்னால் தான் அவனுடைய வெளிநாட்டு மேற்படிப்பு நிறுத்தப்பட்டது என்பது அவளுக்கு குற்ற உணர்ச்சியை தந்தது.

“கார்த்தி, விசா எல்லாம் வந்த பின்னாடி எதுக்கு இப்பிடி ஒரு முடிவை எடுத்த?. நீ US போ. படிச்சுட்டு திரும்பி வா. நான் உனக்காக காத்திருப்பேன். “

“நானும் உன்னை தனியா தவிக்க விட்டுட்டு போகணுமா கீர்த்தி. இப்பவே நீ உடைஞ்சு போயிட்ட டி. நானும் உன்னை விட்டு போனா தாங்குவியா? வேணாம். நான் இங்கே இருக்கேன். இங்கேயே என்னால நல்ல நிலைமைக்கு வர முடியும் கீர்த்தி. இப்போதைக்கு என்னோட வெளிநாட்டு படிப்பை விட உன் நிம்மதியும், சந்தோஷமும் தான் முக்கியம். உன்னை பழைய குறும்பு பண்ற கீர்த்தியா மாத்தணும்.“

“உன் நிழலாக
வரமுடியாவிட்டால் என்ன
வழிகாட்டியாக வருவேன்
வாழ்நாள் முழுதும்!!!”

அவன் கைகளை இறுக பிடித்து கண்களில் வைத்து, “ ஐ லவ் யு கார்த்தி” என்று அழுதாள்.
“எமோஷன் ஆகாத டா. எல்லாம் சரி ஆயிடும்”.

சில நாட்கள் நகர, யாரை சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அவளை தன் அலுவலகத்திலேயே சந்திக்கும்படி ஆனது. முதல் காதலி ஜெனி அவனுடைய அலுவலகத்திற்கு ஒரு நேர்முக தேர்வுக்காக வந்தாள். முதலில் ஜெனியை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவளுக்கு இந்த வேலை கிடைக்க கூடாது என்று கடவுளிடம் மனம் உருகி வேண்டினான். அன்றைய தினமே அவளுக்கு வேலை கிடைத்து கார்த்தியை சந்தித்து பேசினாள். கடவுளின் சோதனைகளில் இதுவும் ஒன்றோ.

“ஹாய் கார்த்தி. எப்பிடி இருக்க? இன்னும் அதே வேலையில தான் இருக்கியா?”

“ஆமா. இப்போ அதுக்கு என்ன? நீ இருந்த வேலையும் போய் தானா இங்க இன்டர்வியூக்கு வந்த. அப்புறம் என்ன?”

“ஹேய். நானா அந்த வேலை பிடிக்காம தான் வேலையை விட்டேன். நீ நினைக்கிற மாதிரி இல்லை. அதோட ஒரே வேலையில 9 வருஷமா உக்காந்து இருக்க நான் என்ன கார்த்தியா?”

“போதும். எனக்கு வேலை இருக்கு. நீ கிளம்புறியா”.


வார்த்தைகளில் எரிச்சலை கக்கினான் கார்த்தி. இருப்பினும் “பை கார்த்தி” என்று கூறி விட்டு கிளம்பினாள்.