Sunday, 29 April 2012

வினையூக்கி நெடுங்கதை போட்டி: கீர்த்தனா - என் தோழி, என் காதலி, என் மனைவி பாகம் -10


அந்த வார கடைசியில் கார்த்தி இல்லதிற்கு கீர்த்தியும், அவள் அம்மாவும் சென்றனர். வழக்கத்தை விட அதிக உபசரிப்புடன் வரவேற்றனர். கார்த்தியின் அம்மாவும், அப்பாவும் மெல்ல பேச்சை ஆரம்பித்தனர்.

“என்ன சென்னை பிடிச்சுருக்கா? வீட்டு பக்கத்துலே எல்லா வசதியும் இருக்கா?”

“ம்ம். எல்லா வசதியும் இருக்கு. கீர்த்தனாவே எல்லாம் வாங்கிட்டு வந்துருவா. நான் பொதுவா வெளிய போறதே இல்லை.

“அதான். உங்களை இங்க கூட்டிட்டு வர சொன்னோம்.”

“உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்றதுனே தெரியலை. கீர்த்தி அப்பா இறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும் முன்னாடி நின்னு செய்யுறது உங்க புள்ளை தான். சொந்த காரங்களே 2 நாள் இருந்துட்டு போனது தான். அதுக்கு அப்புறம் எங்களை திரும்பி கூட பாக்கலை. இதுக்கு எல்லாம் நாங்க என்ன கைமாறு செய்ய போறோம்.”

“இதுல என்ன இருக்கு மா. நாங்களும் உறவு மாதிரி தான். கீர்த்தி கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க.”

“என்ன பண்றதுணு தெரியலை. இவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்காமலே அவரு போய் சேந்துட்டாரு. சொந்தக்காரங்களும் கூட இல்லை. எல்லாம் என் தலையில பெரிய பொருப்பா வந்துருசுங்க.”

“இந்த நிலைமையில இந்த விஷயத்தை பேச கஷ்டமா தான் இருக்கு. ஆனா ஒரு துக்கம் நடந்த வீட்ல ஒரு நல்லது நடத்துறது நல்லது தானா,”

“ நீங்க என்ன சொல்ல வரிங்கணு புரியலை”.

“சரி சுத்தி வளைக்காம நேராவே கேக்குறேன். கீர்த்தியை எங்க வீட்டு மருமகளா ஆக்கிகிற நினைக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க?”.

“திடீர்னு இப்பிடி கேக்குறிங்க. இருந்தாலும் நான் கீர்த்தியை ஒரு வார்த்தை கேக்கணும்.”
“இப்பவே சொல்லனும்னு இல்லை. வீட்டுக்கு போய் நல்லா யோசிச்சு கூட சொல்லுங்க.”

“சரிங்க. அப்போ நாங்க கிளம்புறோம். என்னது. கிளம்புரிங்களா.? மதியம் சாப்பாடு இங்க தான். இருங்க. பாதி சமையல் ல போட்டு வந்துட்டேன். நான் போய் சமைக்கிறேன்.”

“நானும் வரலாமா சமையல் அறைக்கு?

“ஓ!! தாராளமா. வாங்களேன். “

இருவரின் அம்மாவும் சேர்ந்து சமைத்து, எல்லோரும் ஒன்றாக மகிழ்வுடன் உணவு உண்டனர். உணவிற்கு பின் கார்த்தியின் அம்மா, கீர்த்தியையும், அவள் அம்மாவையும் வீட்டை சுற்றி காட்டுகிறேன் எனக் கூறி அழைத்துச் சென்றாள். அப்போது தான் எதிர்பாராத விதமாக சுவரில் மாட்ட பட்டு இருந்த அந்த புகைபடத்தை பார்த்தாள் கீர்த்தியின் அம்மா. பார்த்ததுமே முகம் எல்லாம் மாறி வியர்த்தது. படபடவென்று வந்ததை உணர்ந்த அவள் அங்கேயே அமர்ந்தாள்.

“அம்மா, அம்மா!! என்ன ஆச்சு அம்மா?”

“அம்மாவுக்கு திடீர்னு என்ன ஆச்சு மா கீர்த்தி?”

“தெரியலை ஆண்ட்டி. கொஞ்சம் தண்ணி கொண்டு வரிங்களா?”

“இதோ இருக்கு மா”.

தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தாள். ஹாஸ்பிடல் போகலாமா அம்மா?

“இல்லை கீர்த்தி. வேணாம். அந்த போட்டோவை பாரு மா”.

“இவரா? ஆண்ட்டி இவர் யார் ஆண்ட்டி? அங்கிள் பக்கத்துல நிக்கிறாரே?”

“ஒருத்தர் அங்கிள் ஃப்ரெண்ட். இன்னொருத்தர் அவர் ஃப்ரெண்ட்டோட ஃப்ரெண்ட் மா. எதுக்கு கேக்குற?”

“அது வந்து ஆண்ட்டி!!! அவர் தான் எங்க அப்பாகிட்ட வீடு வாங்கி தரேனு சொல்லி பணத்தை ஏமாத்திட்டு போனார். எங்க அப்பாவோட சாவுக்கு காரணமே அவர் தான்.”

“சாரி மா. நீ சொல்றவர் யாருனே அங்கிள்க்கு தெரியாது.”

“சரி ஆண்ட்டி. நாங்க கிளம்புறோம். அம்மா ரொம்ப டென்ஷன் ஆ இருக்காங்க”.

“சரி மா. பாத்து போங்க. அடிக்கடி அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வா மா”.

“சரி ஆண்ட்டி”.

வீட்டுக்கு சென்றதும் “கீர்த்தனா எனக்கு இந்த சம்மந்தத்துல இஷ்டம் இல்லை அம்மா. அவங்க வீட்ல எதுக்கு தெரியாத ஒருத்தன் போட்டோவை மாட்டி வைக்க போறாங்க. இவங்களுக்கும், அந்த ஆளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும்னு எனக்கு தோணுது மா”
“ச்சா. அப்பிடி இருக்காது மா. அவங்க நல்ல குடும்பம் தான் மா”.
“எனக்கு பிடிக்கலை மா. இதோட இந்த பேச்சை விட்டுடலாம்.”

No comments:

Post a Comment